எல்லோருடைய ஆட்சி இடம்பெற்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் எல்லோருடைய ஆட்சியிலும் குற்ற சம்பவங்கள் நடக்கத் தான் செய்யும் எனக் கூறி அமைச்சர் செல்லூர் ராஜூ சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். விரோதத்திலும், குரோதத்திலும் குற்றங்கள் நடைபெறும். இதனை எந்த ஆட்சியிலும் தடுக்க முடியாது. சர்வாதிகார ஆட்சி நடந்தாலும் சரி, ஹிட்லர் ஆட்சி நடந்தாலும் சரி குற்றச் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் என அவர் கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.