உத்திரப் பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட்மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான எக்ஸிட் போல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இது அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் நோக்கர்கள் என அனைவரின் மத்தியிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில கருத்து கணிப்பு முடிவு:
மொத்தம் 117 இடங்கள்
ஆம் ஆத்மி 62 – 70 இடங்கள்
காங்கிரஸ் 23 – 31 இடங்கள்
அகாலி தளம் கூட்டணி 16 – 24 இடங்கள்
பாஜக கூட்டணி 1 – 3 இடங்கள்
மணிப்பூரில் கருத்து கணிப்பு முடிவு:
மணிப்பூர் மாநில தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. கருத்துக் கணிப்பு முடிவில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக கூட்டணி 27 – 31 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 11 – 17 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 6 – 10 இடங்களிலும் பிற கட்சிகள் 3 – 7 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்திரகாண்ட் மாநில கருத்து கணிப்பு முடிவு:
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக 29 – 34, காங்கிரஸ் 33 – 38, பகுஜன் சமாஜ் 1 – 3, பிற கட்சிகள் 1 – 3 இடங்களை பிடிக்கும் என கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உத்திரப் பிரதேசமாநில கருத்து கணிப்பு முடிவு:
உத்திரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்கவைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 262 – 277 தொகுதிகள், சமாஜ்வாதி 119 – 135, பகுஜன் சமாஜ் 7 – 15, காங்கிரஸ் 3 – 8 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவா மாநில கருத்து கணிப்பு முடிவு:
கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. பாஜக 14, காங்கிரஸ் 16, ஆம் ஆத்மி 4, பிற கட்சிகள் 6 இடங்களை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் அங்கு சுயேட்சைகளின் ஆதரவுடன்தான் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.