Categories
மாநில செய்திகள்

அரசியல் வானில் சுடர்மிகு நட்சத்திரம்… தங்கத்தாரகை அம்மா… நினைவிடத்தில் அம்மாவுக்கு மரியாதை…!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அவரின் நினைவிடத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மரியாதை செலுத்தினர்.

தமிழக மக்கள் அனைவராலும் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் கடலில் தத்தளித்தது. ஒருமுறை அவர் அளித்த பேட்டியில், 60 வயதுக்கு மேல் நான் வாழும் ஒவ்வொரு நாளும் இறைவன் எனக்கு அளிக்கும் கருணை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் 60 வயதை கடக்க உதவிய இறைவன் 70 வயதை தொட கூட கருணை காட்டவில்லை என்பதை சோகத்தின் உச்சம். தமிழக மக்கள் அனைவரின் உள்ளத்திலும் நீங்கா இடம் பிடித்த அம்மா ஜெயலலிதா மறைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள கட்சி தொண்டர்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம்மற்றும் அமைச்சர்கள் அனைவரும் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதுபற்றி துணை முதல்வர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்திய அரசியல் வானில் சுடர் மிகு நட்சத்திரமாய் ஒளி வீசிய தங்கதாரகை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில், அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய இதயதெய்வம் அம்மா அவர்கள் நீடு துயில் கொள்ளும் என் நினைவிடத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களை போற்றி வணங்கி மரியாதை செலுத்தினார்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |