அரசிற்கு எதிராக ஆன்லைனில் பதிவு வெளியிட்ட நான்கு நபர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சீனா அரசிற்கு எதிராக பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
1996 ஆம் ஆண்டு வரை பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவந்த ஹாங்காங் 1997ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு நாடு இரு விதிமுறைகள் என்ற அடிப்படையில் மூலம் தன்னாட்சி பிராந்தியமாக ஹாங்காங் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஹாங்காங்கில் தனது பிடியை நெருக்கும் நடவடிக்கைகளை செய்து வந்த சீனா, சில நாட்களுக்கு முன் அங்கு புதிதாக இயற்றிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டமானது நிறைவேற்றப்பட்டு ஒரு மாத காலம் ஆகியுள்ளது.
இந்த நிலையில் அரசிற்கு எதிராக ஆன்லைனில் கருத்து வெளியிட்ட குற்றத்திற்காக நான்கு நபர்கள் இந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் என கூறியுள்ளனர். சீனாவின் இத்தகைய ஆதிக்க நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றன.மேலும் பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.