கொரோனா பெருந்தொற்று கடந்த 6 மாதமாக தமிழகத்தை புரட்டி போட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இது பேசப்படும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இதனை எதிர்த்து ஆளும் அரசு கடும் போராட்டம் நடத்தி இருக்கிறது. இதை வைத்து அரசியல் நடவடிக்கைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் 10 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் கொரோனாவை கட்டுப்படுத்தி வெற்றி காண வேண்டும் என்ற கட்டாயத்தில் அரசு இருக்கிறது.
சட்டப்பேரவைத் தேர்தலை வெற்றிகரமாக சந்திக்க தேர்தல் களத்தில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருளாதார சரிவு, வேலையின்மை முக்கிய வாக்கு வங்கியாக பிரதிபலிக்கும் என சொல்லப்படுகிறது. இப்படியான சிக்கலை எப்படி சமாளிக்கலாம் என்று ஆளும் அரசு திட்டமிட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் இதற்கு கூடுதல் சிக்கலை கொடுக்கும் வகையில் ஸ்டெர்லைட் மீதான வழக்கு தீர்ப்பு வர இருக்கிறது.
இந்த ஆட்சி காலத்தில் ஆளும் அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்தது தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம். அங்கே நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது அரசின் மீது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பை வழங்க இருக்கின்றது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த நிலையில் பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று உத்தரவைத் தொடர்ந்து உத்தரவிட்டு இருந்த நிலையில் இதை எதிர்த்து தமிழக அரசு சட்டப் போராட்டம் நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட இருக்கின்றது.
உயர்நீதிமன்றம் நாளை வழங்க இருக்கும் தீர்ப்பினால் தமிழக அரசு தமிழக அரசுக்கு கூடுதல் சிக்கல் எழுந்துள்ளது. ஒருவேளை தீர்ப்பு நிர்வாகத்துக்கு சாதகமாக வந்துவிட்டால் வரக்கூடிய தேர்தலை எப்படி ? சந்திப்பது என்றெல்லாம் ஆளும் தரப்பு யோசனையை தொடங்கியுள்ளனர். நாளை உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அனைவரின் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.