Categories
மாநில செய்திகள்

அரசுக்கு இது கூட தெரியாதா?… நீதிபதிகள் சரமாரி கேள்வி…!!!

வேளாண் பல்கலைக்கழக கலந்தாய்வு வழக்கு பற்றி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

வேளாண் பல்கலைக்கழகம் கலந்தாய்வில் சுதந்திரப் போராட்ட வாரிசுகளுக்கான இட ஒதுக்கீடு நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு பொறியியல் மாணவர் களுக்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தற்போது அமல் படுத்துவது ஏன்? கலந்தாய்வு பணி தொடங்கிய பிறகு அரசாணை வெளியிடக் கூடாது என்பது அரசுக்கு தெரியாதா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முதல்வர், துணைவேந்தர் இடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |