Categories
மாநில செய்திகள்

அரசுப்பணிகளில் பெண்களுக்கு… சூப்பர் அறிவிப்பு… தமிழக அரசு அதிரடி!!

அரசுப்பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்று  பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்..

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மனித வள மேலாண்மை துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.. இந்த விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பிடி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்..  அதில், கட்சி வேறுபாடில்லாமல் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும்..

தமிழ்நாடு அரசுத் துறைகள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களை 100% தேர்வு செய்வதற்காக அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ்மொழிப் பாடத்தாள்  கட்டாயமாக்கப்படும்.

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானால் நேரடி நியமன வயது உச்சவரம்பு 2 ஆண்டாக அதிகரிக்கப்படும்.. அரசுப்பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்று  அறிவித்துள்ளார்..

Categories

Tech |