Categories
அரசியல்

அரசுப்பணிகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு…. மநீம வரவேற்பு…!!!

அரசு பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும், முதல் தலைமுறை பட்டதாரி மற்றும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதற்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் வரவேற்பு அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அரசு பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 30% இலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதை மக்கள் நீதி மையம் வரவேற்கிறது. இந்த மாற்றம் தனியார் துறையிலும் நிகழ வேண்டிய ஒன்று. சமத்துவத்தை நோக்கிய பாதையில் தளர்வின்றி பயணிப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |