திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு மண்டல வாரியாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர். பள்ளிக் கல்வி ஆணையர், இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் உள்ளிட்டோரும் நேரடியாக களமிறங்க இருக்கின்றனர். இதுதொடர்பான பிரத்யேக உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வில் சேகரிக்கப்படும் தகவல்கள் புதிதாக திட்டங்கள் உருவாக்கி செயல்படுத்த பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Categories