Categories
மாநில செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களின் அறிவை வளர்க்க…. முதல்வர் கொண்டு வந்த சூப்பர் திட்டம்… சற்றுமுன் தொடக்கம்…!!!

திருச்சி பாப்பாகுறிச்சி அரசு பள்ளியில் வானவில் மன்றத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள 13,200 அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணாக்கர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பரிசோதனை செய்து காட்டப்பட உள்ளது. 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர் மதியம் 2 மணி வரை இந்த பரிசோதனைகளை செய்து பார்க்க உள்ளனர்.

இந்த திட்டத்திற்கு ரூ.25 வரை செலவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாகவும், குழந்தைகளுக்கு இயல்பாக உள்ள படைப்பாற்றலை ஊக்குவிக்க்கும் விதமாகவும் இந்த திட்டம் உதவும் என கூறப்படுகிறது. மேலும் அன்றாட வாழ்வில் இருக்கும் அறிவியலை மாணவர்கள் புரிந்துகொள்ளவும் இந்த திட்டம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |