Categories
மாநில செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல்….. வெளியான குஷியோ குஷி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் அனைத்தும் இன்றோடு முடிவடைகிறது. இதனை தொடர்ந்து நாளை விடுமுறை விடப்படுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 13ஆம் தேதியும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு 10ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் 10, 11 மற்றும் 12ம் தேதிகளில் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடத்தப்படுகிறது. இதில் ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் பயிற்சி வகுப்பு நடத்தப்படுவதால் 12ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு எந்த பயிற்சியும் இல்லை என்பதனால் வரும் ஆறாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தனியார் பள்ளிகள் வழிகாட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |