Categories
மாநில செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்கள் பணி கொடுப்பவராக உயர வேண்டும்… தலைமை செயலாளர் இறையன்பு….!!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டில் பயன் பெறும் மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. அதில் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது மட்டுமல்லாமல் அனைத்து கட்டணத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசு பள்ளி மாணவர்கள் அமுதசுரபி என பாராட்டும் வகையில் படித்து முடித்த பிறகு பணியில் சேர்பவர்களாக அல்லாமல் மற்றவர்களுக்கு பணி கொடுப்பவர்களாக உயர வேண்டும். இட ஒதுக்கீட்டை அரசு பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மற்ற பள்ளிகளில் படித்த மாணவர்களை விட நீங்கள் அதிக திறமை வாய்ந்தவர்கள். லட்சியத்தை நோக்கி நடை போடுங்கள். நாம் கற்கும் கல்வி பலருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சமூகம் பயன் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |