Categories
தேசிய செய்திகள்

அரசுப் பணியாளர் தேர்வுகள்… கொரோனாவால் ஒத்திவைப்பு… மராட்டிய முதல்வர் அறிவிப்பு…!!!

மராட்டியத்தில் நடக்கவிருந்த அரசு பணியாளர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் வருகின்ற 11ம் தேதி அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் நடைபெற இருந்தன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகளை கட்டாயம் ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், “பல்வேறு மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று அதனடிப்படையில் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் தேர்வுகள் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்”என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |