Categories
மாநில செய்திகள்

அரசுப் பள்ளிகளில் “செம்மை பள்ளி திட்டம்”…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

செம்மை பள்ளி திட்டம் செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று கல்வித்துறை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இவர் சென்னையில் உலகத்தரத்திலான பள்ளி ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார். அதாவது அரசு பள்ளி மாணவர்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாக கல்வி, கவின் கலை, அறிவியல், இலக்கியம் விளையாட்டு போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக செம்மை பள்ளி திட்டம் உருவாக்கப்படுகிறது.

இதனையடுத்து சென்னையில் வருகிற ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சர்வதேச சதுரங்க போட்டி நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் சதுரங்க விளையாட்டிற்கான ஆர்வத்தை தூண்டும் விதமாக வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெறும். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச வீரர்களுடன் போட்டியிடும் வாய்ப்பை பெறுவார்கள். இந்தத் திட்டத்திற்காக ரூபாய் 1 கோடி ஒதுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |