அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதியான ஒருவரை தேர்ந்து எடுக்கும் பணியை பள்ளி கல்வித்துறை தீவிரமாக செய்துவருகின்றது.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் 6177 அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 950 க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பதவிக்கான இடங்கள் காலியாக உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் ஆ. நந்தகுமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.
புகார்களில் சிக்கி ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளான ஆசிரியர்களை இந்த பதவிக்கு பரிந்துரை செய்யக் கூடாது என்றும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரி அல்லது மேல்நிலை தலைமை ஆசிரியர் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டும் விருப்ப கடிதம் வழங்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.