Categories
மாநில செய்திகள்

அரசுப் பள்ளிகளில் புது மாற்றம்…. சென்னை மேயர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் அரசு பள்ளிகளை மாநகராட்சியோடு இணைக்க வேண்டும் என்றும், அரசு பள்ளிகளுடைய தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளை, மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைக்க வேண்டும் என சென்னை மேயர் பிரியா வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசுப் பள்ளிகளை மாநகராட்சியோடு இணைத்து, அவற்றின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்காக கல்வித்துறை அதிகாரிகளோடு பேசி தீர்வு காணப்படும் என்றும், ஒரு வருடத்திற்குள் அரசுப் பள்ளிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |