நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று நாளையும் பொருநகை திருவிழா நடைபெறுகிறது. இதனை முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டனர். இதன்பின் விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின்அடையாளம் இல்லை, அது பெருமையின் அடையாளம் என்பதை நிலைநாட்டுகின்ற அரசாக செயல்பட்டு வருகிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் இருக்கக்கூடிய தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 1.30 கோடி மாணவர்கள் இருக்கின்றனர். மாநிலத்தின் மக்கள் தொகையில் 6 பேரில் ஒருவர் பள்ளி மாணவர்களாக இருக்கின்றனர் என்றார்.