Categories
மாநில செய்திகள்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. வயது வரம்பு நீக்கம்?…. தமிழக அரசின் முடிவு என்ன?….!!!!

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வயது வரம்பை நீக்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளை நடத்துவதற்கு அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதனிடையே முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

இந்நிலையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வயது வரம்பை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் 42 வயதை கடந்த பட்டதாரிகள் கலந்து கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது சமூக அநீதியாகும். இந்த ஆசிரியர் பணி களுக்கு வயது வரம்பை நிர்ணயிப்பது நியாயமற்றது. ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயம் அரசுக்கு உரிமை இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்போது தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர் பணிக்கு உரிய கல்வித்தகுதி உடைய லட்சக்கணக்கானவர்கள் 42 வயதை கடந்தவர்கள் மட்டும்தான். இப்படி ஒவ்வொரு முறையும் நடத்தப்படும் தேர்வில் கலந்துகொண்டு ஆசிரியர் ஆகலாம் என காத்திருக்கும் பலருக்கு இந்த வயது வரம்பு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இதனை கருத்தில் கொண்டு ஆசிரியர் பணிக்கு விதிக்கப்பட்ட வயது வரம்பில் இருந்து அரசு தளர்வு அளிக்க வேண்டுமென்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |