Categories
மாநில செய்திகள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு துபாய் சுற்றுலா…. தமிழக அரசு செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த காரணத்தால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் வகையில் பிரிட்ஜ் கோர்ஸ் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆகிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.மேலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தீவிரம் காட்டிவருகிறது.

அதிலும் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தக் கூடிய வகையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனிடையே மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைனில் வினாடி வினா போட்டியை நடத்த பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்திருந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் செப்டம்பர் 18 முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை போட்டியில் கலந்து கொள்ளலாம் என அறிவித்தது. அதில் முன்னணி மதிப்பெண் பெற்ற 89 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை அடுத்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய்க்கு சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதாவது சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து பாஸ்போர்ட் பெறுவது மற்றும் விசா வாங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. துபாய் சுற்றுலா ஏற்பாட்டால் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |