Categories
மாநில செய்திகள்

“அரசுப் பள்ளி மாணவிகளுக்கு குட் நியூஸ்”…..  கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் இதுதான்….!!!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஊக்க தொகை வழங்குவது வழக்கம்.  3 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ரூபாய் 500 ஊக்கத்தொகையும், 6ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரூபாய் 1000 ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது 3 முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஊக்கத்தொகை வழங்க அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கு பதிலாக, வங்கிகளில் தனிநபர் வைப்புநிதி கணக்கு தொடங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாணவியருக்கும் தனித்தனியாக வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஏதுவாக 16.5 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் உதவி தொகை பெரும் மாணவிகளின் ஆண்டு வருமானம் 72,000 என்ற அளவில் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு ஊக்கத் தொகை நேரடியாக வங்கி கணக்கு மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை நீடிப்பதற்கு தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |