Categories
தேசிய செய்திகள்

அரசுப் பேருந்தில் மிக பெரிய கட்டண சலுகை… இனி கவலை வேண்டாம்… கேரள அரசு அதிரடி…!!!

கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 25 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

கேரள அரசு போக்குவரத்து கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, ” கேரளாவில் கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், மாநிலம் முழுவதிலும் அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கிறது. இந்நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடிய வகையில் சூப்பர் பாஸ்ட் பேருந்துகளில் 25 சதவீத சிறப்பு கட்டண சலுகை வழங்கப்பட உள்ளது.

இந்த கட்டண சலுகை செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பயணம் செய்வோருக்கு மட்டுமே வழங்கப்படும். அந்த நாட்களில் பொது விடுமுறை நாளாக இருந்தால் இந்த சலுகை அளிக்கப்படாது. முதல்கட்ட சோதனையாக இந்த சலுகை திட்டம், மறு அறிவிப்பு வருகின்ற வரையில் தொடரும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |