Categories
தேசிய செய்திகள்

அரசுபேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் இனி பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சர்வதேச உலக மகளிர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு பல்வேறு நாடுகளில் அலுவலகங்களில் பெண்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. அதுமட்டுமன்றி தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் அரசுப் பேருந்துகளில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் இனி கட்டணம் இல்லாமல் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பை பஞ்சாப் அரசு நேற்று வெளியிட்டுள்ளது. மேலும் பெண்கள் பாதுகாப்புக்காக 8 புதிய திட்டங்கள் அமல்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |