நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, பூக்காரத் தெருவைச் சேர்ந்த மதியழகன் என்பவரது மகள் மகரஜோதி (16). பதினொன்றாம் வகுப்பு படித்துவரும் இவர், இன்று காலை தனது உறவினர் வீரமணியுடன் இருசக்கர வாகனத்தில் தெற்குப்பொய்கை நல்லூர், விச்சுமரத்தடி கிழக்குக்கடற்கரைச் சாலையில் சென்றுள்ளார்.
அப்போது, சாலையைக் கடப்பதற்கு வீரமணி முயன்றபோது, அவரது வாகனத்தின் மீது சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அதில் மகரஜோதி படுகாயம் அடைந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உறவினர் வீரமணி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் குறித்த காட்சிகள் அங்குள்ள வணிக வளாக சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அக்காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் இதுகுறித்து வேளாங்கண்ணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்