Categories
மாநில செய்திகள்

அரசு அதிகாரத்தை கையில் எடுக்கும் துணைவேந்தர்… தமிழக அரசு ஆதரவா?… வைகோ கேள்வி…!!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாநில அரசின் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு தன்னிச்சையாக செயல்படுகிறார் என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, “மாநில அரசின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், தமிழக அரசிடம் அனுமதி பெறாமல், மத்திய அரசுக்கு எப்படி நேரடியாக கடிதம் எழுதினார்? அல்லது துணைவேந்தருக்கு தமிழக அரசு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறதா?. இதற்கு தமிழக அரசு ஒரு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். மாநில அரசின் அதிகாரத்தை தனது கையில் எடுத்துக்கொண்டு தன்னிச்சையாக செயல்பட்டு கொண்டிருக்கும் துணைவேந்தர் சூரப்பாவை வெளியேற்றுவதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு ஒரு தெளிவான முடிவு எடுக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதால்,அதன் உலகப்புகழ்பெற்ற தனித்தன்மை பறிபோய்விடும் என கல்வியாளர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் அனைவரும் கருத்து தெரிவிக்கின்றனர். அதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு,அண்ணா பல்கலைக்கழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீடு கொள்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது”என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |