அரசு அமைப்புகள் ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கு அதிகாரிகள் துணை போவதாகவும் பா.ஜ.க எம்.எல்ஏ கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.கவின் தேசிய கூட்டணி கட்சியை பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதாவது பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் பச்சோல் பீகார் அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சாட்டியுள்ளார். அவர் அரசு ஊழலில் சிக்கி உள்ளதாகவும், அதற்கு அதிகாரிகள் துணை போவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.
அதில் முர்சாபூர் காவல்நிலையத்திற்கு ஒரு ஊழல் வழக்கு தொடர்பாக நான் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். அந்த அதிகாரி என்னுடைய கருத்தை கேட்காமல் சட்டம் ஒழுங்கு குறித்து பாடம் நடத்தினார். நான் இந்த கட்சியைச் சேர்ந்தவன். என் கருத்துக்களை தெரிவிக்க எனக்கும் உரிமையுண்டு. நிர்வாகத்தில் ஆழமான நிலைப்பாட்டை எடுக்க முடிவு செய்துள்ளேன். மேலும் ஊழலுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார்