நாடு முழுவதும் இன்று 73-வது குடியரசு தின விழா கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த வட தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம்பெறாதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தில்லி அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களை புறக்கணிப்பது நியாயமா என்று கூறியுள்ளார்.
Categories