கொரோனா தொற்று குறைய தொடங்கியதன் காரணமாக இன்று முதல் 100% பணியாளர்களுடன் அரசுஅலுவகங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் தற்போது கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அதில் மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.
அதில் மத்திய அரசில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் செல்வதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கட்டுப்பாடுகள் நீங்கும் வரை அலுவலகம் வருவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலங்களில் 50 % பணியாளர்களுடன் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை செயலாளர் அருகிலுள்ள பதவிகளில் வலிக்கும் பணியாளர்கள் மொத்தம் 50 % பணியாளர்கள் மட்டும் அலுவலகத்திற்கு வர வேண்டும். மீதமுள்ள பணியாளர்கள் வீட்டில் இருந்து தங்களுடைய பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜனவரி 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்துவரும் காரணத்தால், மத்திய அரசு அலுவலகங்களில் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் இன்று முதல் 100 % ஊழியர்களுடன் செயல்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து இன்று முதல் மத்திய அரசு அலுவலகங்களில் 100 % பணியாளர்கள் செயல்பட உள்ளன. அனைத்து ஊழியர்களும் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அலுவலகங்களில் ஊழியர்கள் முக கவசம் மற்றும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டியது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.