காயல்பட்டினத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் உதவி கலெக்டர் புகாரி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள அரசுத் துறை அலுவலகங்களில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி இன்று திடீர் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதன்படி காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராம அலுவலகம், அரசு மாணவர் விடுதி, அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடைகள் போன்ற இடங்களுக்கு சென்று ஆய்வுகளை நடத்தினார்.
மேலும் காயல்பட்டினம் பஸ் வளாகத்தில் உள்ள அரசு பொது நூலகத்திற்கு சென்று பதிவேடுகள், நூல்கள் பராமரிக்கப்படும் விதம், நூலகத்தில் அமையப்பெற்றுள்ள வசதிகள், போட்டித்தேர்வு புத்தக பிரிவு, வாசகர்கள் வருகை விவரம் மற்றும் பணியாளர்கள் குறித்த விவரங்கள் கிளை நூலகர் முஜீபுவிடம் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார். மேலும் மழைக்காலங்களில் காயல்பட்டினங்களின் குடியிருப்பு பகுதிகள், வெள்ளத்தில் தத்தளிக்கும் பிரச்சினை குறித்தும், அப்போது வடிகால் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அறிந்த அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு பணிகளின் போது திருச்செந்தூர் மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் சங்கரநாராயணன், வருவாய் ஆய்வாளர் சித்தர் பாபு, காயல்பட்டினம் வி.ஏ.ஓ.ராஜா போன்றோர் உடன் இருந்துள்ளனர்.