நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் பல மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்ட வந்த ஊரடங்கு நடவடிக்கையின் காரணமாக தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அதன்படி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மறுபடியும் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
அதுமட்டுமின்றி அரசு அலுவலர்களும் பழையபடி அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு அலுவலகங்களில் நவம்பர் 8ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாகபயோ மெட்ரிக் முறை தடை செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இந்த முறை அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் அலுவலக கூட்டங்களை முடிந்த வரை ஆன்லைனில் நடத்தவும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றவும் ஆணையிட்டுள்ளது.