Categories
உலக செய்திகள்

அரசு அலுவலகத்தில் இரட்டை குண்டு வெடிப்பு…. சுகாதாரத்துறை மந்திரி உள்பட 12 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

சோமாலியாவில் அரசு அலுவலகத்தில் நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் சுகாதாரத்துறை மந்திரி உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில்  சோமாலியாவில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இந்த பயங்கரவாத அமைப்பானது சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சித்து வருகின்றது. மேலும், பொதுமக்கள், ராணுவத்தை குறிவைத்து அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் ஹிரன் மாகாண தலைமை அலுவலகத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் தலைமை அலுவலகத்திலிருந்த ஹிரன் மாகாண சுகாதாரத்துறை மந்திரி உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் சமபவத்திற்கு அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும் அல்-ஷபாப் அமைப்பின் முக்கிய தலைவரான அப்துல்லாவை கடந்த சனிக்கிழமை அன்று சோமாலிய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |