Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அரசு ஆண்கள் கல்லூரி அமைக்கப்படும்..! கொடைக்கானல் கிராம பகுதிகளில்… தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கிராம பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கொடைக்கானல் கிராம பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் செந்தில் குமார் எம்.எல்.ஏ. கடந்த இரண்டு நாட்களாக பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் கொடைக்கானல் நகரம் அண்ணாநகர், மூஞ்சிக்கல், கலையரங்கம், நாயுடுபுரம், அப்சர்வேட்டரி ஆகிய இடங்களில் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதற்கு முன்னதாக கிறிஸ்தவர்கள், குறிஞ்சி ஆண்டவர் கோவில், தேவாலயங்களுக்கு வந்த பக்தர்கள் ஆகியோரிடம் தி.மு.க.வின் சாதனைகளை எடுத்து கூறி வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பொதுமக்களிடையே கூறியதாவது;-

கொடைக்கானலில் 15 ஆயிரம் தொழிலாளர்கள், 350-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் “சீல்” வைக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களில் பலரும் வெளியூருக்குச் சென்று விட்டனர். ஆகவே அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஹோட்டல் உரிமையாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியிடம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தும், அவர்கள் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும் இது குறித்து தற்போது பொய்யான வாக்குறுதிகளை கூறுகின்றனர். மு.க.ஸ்டாலின் என்ற சுனாமி அலை தமிழகத்தில் வீசி வருகிறது. இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. மேலும் மு.க.ஸ்டாலின் தலைமையில் விரைவில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது உறுதி. அதன்பின் இலவச வீட்டுமனை பட்டா, கொடைக்கானல் மலை பகுதி மக்கள் அனைவருக்கும் வழங்கப்படும்.

கொடைக்கானல் மலைப்பாதை தரம் உயர்த்தப்படும். மேலும் கொடைக்கானலில் அரசு ஆண்கள் கல்லூரி அமைக்கப்படும். சர்வதேச சுற்றுலா தலமாக கொடைக்கானல் மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார். பிரச்சாரத்தில் தி.மு.க. நகர செயலாளர் முகமது இப்ராகிம், திண்டுக்கல் எம்.பி. வேலுசாமி, நகர நிர்வாகிகள் முகமது நயினார், முனியாண்டி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன், முன்னாள் பிரதிநிதிகள் அஜ்மல்கான், டார்லிங்அப்துல்லா, மாரிமுத்து, ராஜாராணிராஜா, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல்கனி ராஜா, நகர காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆண்டி, ம.தி.மு.க. நகர செயலாளர் தாவுது, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமச்சந்திரன், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சின்னு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |