கடந்த வருடம் ஜூலை முதல் உத்தரப்பிரதேசத்தின் டிஜிபியாக முகுல் கோயல் இருந்தார். இவரை உத்தரப்பிரதேச அரசு டிஜிபி பதவியிலிருந்து நீக்கி முக்கியத்துவம் இல்லாத பதவியாக கருத்தப்படும் சிவில் பாதுகாப்புத்துறை டிஜி பதவியில் பணி அமர்த்தி இருக்கிறது. இது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு கூறியிருப்பதாவது, “முகுல் கோயலுக்கு பணியில் ஆர்வம் இல்லாததும், அரசு உத்தரவுகளை மதிக்காமல் செயல்பட்டதும்தான் காரணம் என தெரிவித்துள்ளது.
சென்ற மாதம் முகேஷ் கோயல் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்ததும் காரணம் என கூறப்படுகிறது. இவர் இந்திய திபேத்திய எல்லை பாதுகாப்புபடை, தேசிய பேரிடர் மீட்பு படை போன்றவற்றிலும் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.