Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியரின் 2-வது மனைவிக்கு இது கிடையாது…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஊழியரின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரசு ஊழியரின் இரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதிய பெரும் உரிமை கிடையாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச காவல்துறையில் 1983 ஆம் ஆண்டு வரை பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவர் கடந்த 2002 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவருக்கு தேவி மற்றும் துர்க்கி தேவி என்ற இரு மனைவிகள் உள்ளன. குடும்ப ஓய்வூதியத்திற்கு அந்த நபர் தனது இரண்டாவது மனைவியின் பெயரையும் சேர்த்துள்ளார்.

ஆனால் அந்த நபர் உயிரிழந்த பிறகு முதல் மனைவி தேவிக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைத்து வந்துள்ளது. அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு தேவி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து குடும்ப ஓய்வூதியம் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவரின் இரண்டாவது மனைவி துர்க்கி தேவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் . இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முதல் மனைவி இருக்கும் போதே மனுதாரரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். அதனால் இரண்டாவது மனைவியாக குடும்ப ஓய்வூதியம் பெற மனுதாரருக்கு உரிமை இல்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Categories

Tech |