அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தேரழுந்தூர் தென்பாதி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மயிலாடுதுறையிலுள்ள நீதிமன்றத்தில் கட்டளை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். மயிலாடுதுறை தொகுதியில் அ.தி.மு.க. கிளை செயலாளரான ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீதர் நீதிமன்றத்திற்குள் செல்லும்போது பணியிலிருந்த கணேசன் கொரோனா பரவல் காரணமாக நீதிமன்றத்திற்குள் வருவதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது என்றும், அவரை வெளியே செல்லுமாறும் கூறியுள்ளார்.
அதன்பின் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணேசன், ஸ்ரீதர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் கொலை மிரட்டல் விடுத்ததற்காக ஸ்ரீதர் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.