ஆந்திர மாநில அரசு 11வது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என அறிவித்திருந்தது. அதோடு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் சம்பள உயர்வை திரும்ப பெற வேண்டுமெனவும் பழைய ஊதிய உயர்வு திட்டத்தையே மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் ஆந்திர மாநிலத்தில் அரசு ஊழியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநில அரசு ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது தொடர்பாக இன்னும் அரசாணை வெளியிடவில்லை. இதனால் இந்த மாதம் ஓய்வு பெற உள்ள ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து ஊழியர் ஒருவர் கூறுகையில், “இந்த மாதம் எனக்கு 60 வயது ஆகப்போகிறது. இந்த மாதத்தில் எனக்கு ஓய்வு கிடைக்குமா அல்லது என்னுடைய பனிக்காலம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இது பற்றி உயர் அதிகாரிகளிடம் கேட்பதற்கும் ஒன்றுமில்லை.!” என்று தெரிவித்துள்ளார்.