கேரள மாநிலத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு மின்சார வாரியம், சாலைப் போக்குவரத்து கழகம் மற்றும் குடிநீர் வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தவிர்த்து பிற அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான ஊதிய அமைப்பை கொண்டு வருவதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ஓய்வூதிய வயது உயர்வுக்கு பாஜக உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு இளைஞர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டினர். கடந்த புதன்கிழமை நடைபெற்ற முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தின் போது அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிப்பது தொடர்பான முடிவை கைவிடுவதாக முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். மேலும் இது எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி என்று எதிர்க்கட்சித் தலைவர் வி.டி சதீஷன் என்று கூறியுள்ளார்.