Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கான…. சம்பளம் 1 ஆண்டு நிறுத்திவைப்பு – தமிழா அரசு…!!!

தமிழ்நாடு அரசு விடுப்பு விதிகளின்படி அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு கொடுக்கப்படுகிறது. அந்த வருடத்தில் அரசு ஊழியர்கள் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்காவிட்டால் வருடத்தின் முடிவில் 15 நாட்களுக்கான முழு ஊதியமும் எவ்வித பிடித்தம் இல்லாமல் வழங்கப்படும். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு பணிகளுக்கு அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது.

எனவே கொரனா பரவல் காரணமாக அதிக நிதிச்சுமையை தமிழக அரசு சந்தித்துள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் சம்பள தொகையை ஒரு வருடத்திற்கு அதாவது 2022, மார்ச் 31 வரை நிறுத்தி வைத்து  தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Categories

Tech |