Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விதிகளில் மாற்றம்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய செய்தி வந்திருக்கிறது. அதாவது, மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஓய்வூதிய விதிகளில் அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அரசாங்கம் வெளியிட்டுள்ள புது விதிகள் ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும். ஜனவரி 1, 2023 முதல் அரசு ஊழியர்கள் தங்களது நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுக்க நோடல் அலுவலகங்கள் வாயிலாக மட்டுமே கோரிக்கை விடுக்க முடியும்.

ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கொரோனா தொற்று நோய்களின்போது விதிகளை தளர்த்தியது. அதன்கீழ் என்பிஎஸ்-ன் கீழ் தானியங்கி அறிவிப்பு அனுமதிக்கப்பட்டது. அரசாங்க துறையின் பங்குதாரர்கள் தங்களது கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட நோடல் அலுவலகங்கள் வாயிலாகவே அனுப்ப வேண்டும் என முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் புது உத்தரவின்படி, வரி செலுத்தபவர்கள் சிகிச்சைக்காக பெறக்கூடிய தொகைக்கு வருமானம் வரியில் விலக்கு வழங்கப்படும். அதன்படி, இத்தொகைக்கு நீங்கள் வரிசெலுத்த வேண்டியதில்லை.

Categories

Tech |