Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

குஜராத் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்துவோம் என தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வருடம் இறுதியில் குஜராத் சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் ஆளும் பாஜக-வை எதிர்த்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் நேரடியாக போட்டியிட உள்ளது. தில்லியை அடுத்து பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி, பிற மாநிலங்களிலும் கால் பதிக்கும் முனைப்பில் குஜராத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

குஜராத் மாநிலத்தில் பல கட்டங்களாக பிரசாரத்தை மேற்கொண்டு வரும் கெஜ்ரிவால், வதோதராவில் இன்று பேசியதாவது “குஜராத்தில் பல தினங்களாக  பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்தக் கோரி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது கோரிக்கைகளானது பூர்த்திசெய்யப்படும். பஞ்சாபில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று குஜராத்தில் ஆட்சியமைத்த சில தினங்களிலேயே அமல்படுத்துவோம்.

நாங்கள் பணவீக்கத்தை ஒழித்து மருத்துவமனைகள், பள்ளிகள் கட்டுவோம் எனவும் மின்சாரத்தை குறைந்த விலையில் கொடுப்போம் எனவும் வாக்குறுதி அளிக்கிறோம். பா.ஜ.க-வின் மீது பரிதாபப்படுகிறேன். பாஜக-வை போல் உபயோகமில்லாத கட்சியை ஒரு போதும் நான் பார்த்ததில்லை. இக்கட்சிகள் 75 வருடங்களில் செய்யாததை பகவந்த்மான் வெறும் 6 மாதங்களில் செய்து இருக்கிறார்” என தெரிவித்தார். முன்பாக குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்ட கெஜ்ரிவால் வேளாண் கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறார்.

Categories

Tech |