Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான விதிகளில் புதிய மாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட மற்றும் ராஜினாமா செய்த அரசு ஊழியர்கள் தங்களின் விடுப்பு பலன்களை பணமாக்க தகுதியற்றவர்கள் ஆகிறார்கள் இன்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,தமிழகத்தில் அரசு ஊழியர்களின் அடிப்படை விதிகளில் ஒரு அரசு ஊழியரை பணியிலிருந்து நீக்குதல் என்பது அவரது கடந்த கால சேவையை ரத்து செய்யும் என்ற விதி புதிதாக தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் தனது சேவை அல்லது பதவியில் இருந்து ராஜினாமா செய்தால் கடந்த கால சேவையை இழக்கக்கூடும்.

அதேசமயம் சேவை தகுதியுடைய அரசின் கீழ் தற்காலிகமாக, சுதந்திரமாக, முறையான அனுமதியுடன் மற்றும் அரசியல் கீழ் மற்றொரு நியமனத்தை மேற்கொள்வதற்காக பதவி விலகல் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் அந்த அரசு ஊழியர் சேவையை இழக்க வேண்டிய நிலை ஏற்படாது. மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட அல்லது ராஜினாமா செய்த அரசு ஊழியர்கள் அவர்கள் சம்பாதித்த விடுப்பு மற்றும் தனியார் விவகாரங்களுக்கான விடுப்பை பணமாக்குவதற்கு தகுதியற்றவர்கள் ஆகிறார்கள். அவர்களின் இடைநீக்க காலத்தை ஒழுங்கு படுத்திய பிறகுதான் பண பலன் வழங்க வேண்டும் என அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |