அரசுத் துறையில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் பொதுவருங்கால வைப்பு நிதி (GPF) ஒரு நல்ல சேமிப்பு கருவியாகும். ஏனெனில் ஊழியர்கள் பணியில் உள்ள காலம்வரை தங்களது சம்பளத்தில் ஒரு பகுதியை தவறாமல் வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஓய்வு பெறும்போது GPF கணக்கில் திரட்டப்பட்ட மொத்தத் தொகையை அவர்கள் பெற்று பயன்பெறலாம். இந்த வருங்கால வைப்புநிதி அமைப்பின் சந்தாதாரர்களுக்கு GPF மீதான வட்டி விகிதத்தை ஏப்ரல் 1, 2022 முதல் ஜூன் 30, 2022 வரையுள்ள காலத்திற்கு 7.1 சதவீதமாக நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவில் 2021 – 2022 நிதியாண்டில் G.P.F (TN) சந்தாதாரர்களின் கிரெடிட்டில் திரட்சியின் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் 2022-2023 நிதியாண்டில் பொது வருங்கால வைப்புநிதி மற்றும் பிற ஒத்தநிதிகளுக்கான சந்தாதாரர்களின் வரவுகளில் திரட்சிகள் 7.1 சதவீதம் என்ற விகிதத்தில் ஏப்ரல் 1, 2022 முதல் ஜூன் 30, 2022 வரையுள்ள காலத்தில் செலுத்தப்படும் என இந்திய அரசு அதன் 5-வது தீர்மானத்தில் அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பொது வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களின் கடனுக்கான வட்டி விகிதம் ஏப்ரல் 1, 2022- ஜூன் 30 வரை 7.1 சதவீதம் என்ற விகிதத்தில் செலுத்தப்படும் என அரசாங்கம் தற்போது அறிவுறுத்துகிறது. அத்துடன் வருங்கால வைப்புநிதி திரட்சியின் தாமதமான இறுதிச் செலுத்துதலுக்கான வட்டி விகிதம், அது செலுத்தப்பட வேண்டிய 3 மாதங்களுக்கும் மேலாக செலுத்தப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக அந்த வட்டி விகிதம் அதே விகிதங்களில் இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.