தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகலவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்தப்படுவதாக சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,தமிழக முதல்வர் 75 வது சுதந்திர தின உரையில் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் அகலவிலை படியை உயர்த்தி வழங்கப்படும் என்ற கோரிக்கையை ஏற்று கடுமையான நிதிச் சுமைக்கு இடையில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் அகலவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பின்படி தலைமைச் செயலாளர் முதல் கடை நிலை ஊழியர் வரை அனைத்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் இந்த அகல விடைப்படி ஜூலை 1ஆம் தேதி முதலில் உயர்த்தி வழங்கப்படும். அதற்கான அரசாணைகள் விரைவில் தனித்தனியே வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.