மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக அகலவிலைப்படி உயர்வு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த மாதம் அகலவிலைப்படி உயர்வு பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே போவதால் நடப்பு ஆண்டை போல குறிப்பிட்ட சில ஆண்டுகளில் பணவீக்கம் அதிகமாக உயர்கிறது. பண வீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி வழங்கப்படுகிறது.
அதன்படி ஜனவரி முதல் ஜூன் மற்றும் ஜூலை முதல் டிசம்பர் என ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்.இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதங்களுக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீதம் அகல விலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகலவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜூலை முதல் டிசம்பர் மாதங்களுக்கான அகல வேலைப்படி உயர்வை இந்த மாதம் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் அகலவிலைப்படி நிலுவைத் தொகையும் இந்த மாதம் செலுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.குறிப்பாக நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் மொத்த அகலவிலைப்படி 38 சதவீதமாக உயரும் எனவும் கூறப்படுகிறது.இந்த தகவல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.