மத்திய அரசு பணியாளர்களுக்கு மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 28 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அனைவருக்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக 17 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், மேலும் 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது ஜூலை 2021 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இது மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.