மார்ச் 16 ஆம் தேதிக்குள் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் அகவிலைப்படி உயர்வு குறித்து காத்திருக்கின்றனர். ஹோலி பண்டிகைக்கு முன்பாக அகவிலை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வந்தது. இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில் மார்ச் 16-ம் தேதிக்கு முன்பாகவே அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 31 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல அடிப்படை சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றர்.
சமீபகாலமாக பணவீக்கம் கடுமையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக உக்ரைன் , ரஷ்யா போருக்கு பின் பொருளாதார பணவீக்கம் மேலும் மோசமடைந்துள்ளது. பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இதனால் முன்பைவிட இப்போது அகவிலைப்படி உயர்வு மிக முக்கியமானதாக உள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 16ஆம் தேதிக்குள் அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.