மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு பற்றி பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 விழுக்காடாக உள்ளது. இந்நிலையில் புத்தாண்டு பரிசாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜனவரி மாதம் மேலும் 3% உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டு வாடகை படியையும் உயர்த்த வேண்டும் என அரசிடம் மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று ரயில்வே ஊழியர்கள் சங்கங்கள் உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த வகையில் ஊழியர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அகவிலைப்படி,வீட்டு வாடகைப்படி மற்றும் அடிப்படை சம்பளம் ஆகிய மூன்றுமே உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 போடச் என்றே கூறலாம். இந்த தகவல் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.