தமிழகத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர்கள் பேறுகால விடுப்பில் சென்றால் அவர்களுக்கு வீட்டு வாடகைப்படி வழங்கப்படாது என்று தமிழக அரசு புதிய அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பேறுகால விடுப்பு 12 மாதம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பேறுகால விடுப்பில் செல்லும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்றும், அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
Categories