ஒடிசா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறையாக 14 நாட்கள் வழங்கப்பட்டு வந்தது. இதனால் ஊழியர்கள் வீட்டிலேயே வசதியாக ஓய்வெடுத்துக் கொள்ள முடிந்தது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கபடும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு விடுமுறை வழிகாட்டுதல்களை ஒடிசா மாநில பொது நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை மாற்றியுள்ளது. அதன்படி இனி அரசு ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் 7 நாட்கள் மட்டுமே அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும்.
அதேசமயம் காய்ச்சல் 7 நாட்களுக்கு மேல் நீடித்தால் உரிய மருத்துவ சான்றிதழை காண்பித்தால் மட்டுமே ஊழியர்களுக்கான விடுமுறை நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த புதிய உத்தரவு தொடர்பில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்து துறை தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.