Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இந்த சலுகைகள் ரத்து…. மத்திய அரசு திடீர் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றும் அனைத்து இந்திய சேவை அதிகாரிகளுக்கான பல்வேறு சலுகைகளை ரத்து செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றும் அனைத்து இந்திய சேவை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வரக்கூடிய சேவைகள் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதம் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் அனுப்பப்பட்டுள்ளது.கடந்த 2009 ஆம் ஆண்டு வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றும் அனைத்து இந்திய சேவை ஊழியர்களுக்கு கூடுதல் படித்தொகை சலுகை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐ எஃப் எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் படித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி அசாம் மற்றும் மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த அனைத்திந்திய சேவை அதிகாரிகளுக்கு அடிப்படை சம்பளத்தில் 25 சதவீதம் தொகை சிறப்பு படியாக வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த சிறப்பு படித்தொகை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |