நாடு முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 18 வயது மேற்பட்டோருக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசிகள் பற்றிய தவறான வதந்திகளால் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் நாளடைவில் மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர். நம்மிடம் கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். இதனால் கொரோனா பாதிப்புகளும் இந்தியாவில் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு 100% மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. மேலும் 3-வது தவனை தடுப்பூசி செலுத்துவது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் தங்களை பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள விரைவாக தடுப்பூசிகளை செலுத்துமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது.
இன்னும் சிலர் முதல் டோஸ் தடுப்பூசியேசெலுத்தி கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் அரசு ஊழியர்களை தடுப்பூசி செலுத்த வைக்கும் நோக்கில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.